தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுவிக்க வேண்டும்! சஜித் வலியுறுத்து

“சிறைச்சாலைகளில் தற்போது உள்ள 31 தமிழ் அரசியல் கைதிகளும் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும்” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“அரசியல் தீர்வு காண்பதற்கு முன்னர் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்துடன் நான் உடன்படுகின்றேன்.

காணி விவகாரமும், அரசியல் கைதிகள் விடயமும் அவற்றில் முக்கியம் பெறுகின்றன. சிறைகளில் தற்போது தமிழ் அரசியல் கைதிகள் 31 பேர் உள்ளனர் என்று நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அவற்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 15 பேரையும் பாதிக்கப்பட்ட தரப்புக்களுடன் பேசி பொதுமன்னிப்பில் ஜனாதிபதியால் விரைவாக விடுவிக்க முடியும்.

குற்றஞ்சாட்ட ஏனைய 16 பேர் மீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தி அவர்களையும் ஏதோவொரு வழியில் விரைந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய நாம் எந்த எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்த மாட்டோம்” என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews