சுகாதார அமைச்சுக்கு அதிபர் ரணில் பெருந்தொகை நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாலும் மேலும் இன்னோரன்ன நிதி நிறுவனங்களின் உதவிகளினாலும் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மருந்து தட்டுப்பாடு பூஜ்ஜியத்திற்கு கொண்டு வரப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந் திப்பிலேயே அமைச்சர் ரம்புக்வெல்ல இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரையாற்றிய அமைச்சர்,
ஆசிய அபிவிருத்தி வங்கி, இந்திய கடன் உதவி உட்பட பல சர்வதேச நிறுவனங்கள் இந்நாட்டின் மருந்துப்பொருள் பிரச்சினையை தீர்க்க தேவையான ஆதரவை வழங்கவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டி னார்.
மருந்தின்றி மருத்துவமனைகளில் நோயாளிகள் இறப்பதைக் காணவும் அதைத் தங்களுக்குச் சாதகமாக மாற்றிக்கொண்டு அரசியல் செய்பவர்கள் நாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் எப்போதும் மருந்துஇறக்குமதி திட்டத்தை சீர்குலைக்கவே முயற்சி செய்கிறார்கள்.
மேலும் 183 வகையான அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு கேள்வி கோரப்பட்டபோது, மூன்று நிறுவனங்கள் மட்டுமே முன் வந்ததாகவும், ஒரு மாதத்திற்குப் பிறகு அவர்களும் அந்த நடவடிக்கையை கைவிட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.