பேருந்து கட்டணம் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்

இரண்டு தடவைகள் டீசலின் விலை 25 ரூபாவினால் குறைக்கப்பட்டதன் காரணமாக பேருந்து கட்டணத்தில் குறைக்கப்படக்கூடிய தொகை தற்போது கணக்கிடப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் டீசல் விலை 15 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கேற்ப பேருந்து கட்டணங்களை திருத்தம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
அதன்படி, அதற்கான கணக்கீடுகள் இன்று போக்குவரத்து அமைச்சருக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளதாகவும், அனுமதி கிடைத்தால் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகள், தனியார் பேருந்துகள் மற்றும் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகள்என அனைத்து பேருந்துகளின் கட்டணங்களும் அதற்கேற்ப திருத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பான தீர்மானம் இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் எனவும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews