வீணாக்கப்படும் 700 மில்லியன் தொகை. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆலோசனை

முழுமையான வீடியோ https://youtu.be/Wc03oxBUkTY
வீணாக்கப்படும் 700 மில்லியன் தொகையை முறையாக கையாண்டால் 200 மில்லியன் வரியை பாதுகாக்கலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.
மல்லாவி, மன்னார், கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி வைத்தியசாலையில் இன்று பிற்பகல் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
தன்னிச்சையான அசாதாரண வரி திருந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அச்சங்கத்தின் பிரதிநிதிகள் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் பொருளாதாரம் பாரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து தரப்பும் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர்.
இதேவேளை, பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதனால் மறைமுகமான வரி அதிகரித்துள்ளது. பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் வரி திணிப்புகள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக, அரச உத்தியோகத்தர்களிற்கும் வரி திணிக்கப்படுகிறது. இதுவரை அரச உத்தியோகத்தர்களிற்கு சம்பளம் அதிகரிக்கப்படவில்லை.
இந்த நிலையில் பாரிய பாதிப்பை இந்த வரி அதிகரிப்பு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக வைத்தியர்கள் உள்ளிட்ட பலருக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இங்கு கடமையாற்றும் வைத்தியர்களில் அதிகமானோர் கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து வருகின்றனர். அவர்களிற்கு பல்வேறு செலவுகள் காணப்படுகிறது.
இந்த நிலையில், அரசாங்கத்தினால் அறவிடப்படவுள்ள வரி அதிகரிப்பு பாதிப்பினை ஏற்படுத்தும். பல அவங்களும் ஏற்படும். இந்த வரி அறவீட்டின் ஊடாக 68 பில்லியன் வரிப்பணத்தை பெற முடியும் என அரசு கூறுகின்றது.
ஆனால், வருடம் தோறும் 700 மில்லியன் வரி முறையற்ற வகையில் வீண் விரயமாக்கப்படுகிறது. இதனை சீர் செய்தால் 200 மில்லியன் வரையான வரிப்பணத்தை பாதுகாக்கலாம்.
மேலும், தனி நபர் வருமானத்திலிருந்து பெறப்படும் வரி அறவீட்டை 1 லட்சத்திலிருந்து மேற்கொள்ளாமல், 2 லட்சத்திலிருந்து அறவிடும் வகையிலும் ஆலோசனை வழங்கியுள்ளோம்.
இந்த அறவீட்டு முறை தொடர்ந்தால், ஏனைய தொழிற்சங்கங்கள், பொறியியலாளர்கள் உள்ளிட்ட தரப்பினரையும் இணைத்து போராட்டங்களில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படும்.
வரி அறவீட்டு முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் அவர்கள் இன்று வலியுறுத்தியிருந்தனர்.
https://youtu.be/Wc03oxBUkTY

Recommended For You

About the Author: Editor Elukainews