கர்நாடகாவில் இலங்கை அகதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் இடைநிறுத்தம் !

இந்தியாவின் கர்நாடகாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இலங்கை அகதிகள் 38 பேரும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய வாக்குறுதிகளுக்கு அமைய தமது போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளனர்.
கனடா செல்வதற்காக முகவர்களால் இந்தியாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களாலேயே காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய விடுதலையாகியிருந்தனர்.
இருந்தபோதிலும் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து இலங்கை அகதிகள் 38 பேர் இன்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
https://youtu.be/Wwbo0V1LEz4
குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்கள் மூலமும் சமூகச் செயற்பாட்டாளர்களாலும் இலங்கைத் தூதரக அதிகாரிகள் மற்றும் கர்நாடகாவில் அகதிகள் தங்கவைக்கப்பட்டுள்ள பகுதிக்குப் பொறுப்பான அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கை அகதிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டனர்.
இதன் போது எதிர்வரும் செவ்வாய்க்கிழமை, வெளிநாட்டு அகதிகள் விவகாரங்களைக் கையாளும் அதிகாரிகள் நேரில் வந்து கடவுச்சீட்டுக்களை வழங்குவதுடன் நாட்டிற்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்வார்கள் என்றும் உண்ணாவிரத்தைக் கைவிடுமாறும் உள்ளூர் அதிகாரிகள் அகதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து தமது போராட்டத்தினை தான் இடைநிறுத்திக்கொண்டதாகவும் வாக்குறுதி நிறைவேறாத பட்சத்தில் தமது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எமக்குத் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews