இலங்கை தமிழர்களுக்கு 317 கோடி நிதி ஒதுக்கீடு! உலக தமிழர்களின் பாராட்டு…!

இந்தியா – தமிழக முகாம்களில் வாழும் இலங்கை தமிழ் மக்களின் நலன்களை மேம்படுத்த சுமார் 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒதுக்கீடு செய்துள்ளார். இது குறித்து தமிழக சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர், 

 தமிழ்நாட்டில் ஏதிலிகளாக தஞ்சமடைந்து எதிலிகள் முகாம்களிலும், வெளிப்பதிவு முறையிலும் தங்கியுள்ள ஈழத் தமிழர் நலனுக்காக ரூ.317 கோடி நிதி ஒதுக்கிடு செய்கிறோம். “கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால், கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால்” என்று

எழுதினார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. அத்தகைய பேரறிஞர் அண்ணா அவர்களுடைய வழி நடக்கக்கூடிய இந்த அரசின் சார்பில், கடல் கடந்து வந்த இலங்கைத் தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைக்கக்கூடிய வகையில் 317 கோடி ரூபாய் பணத்தை

ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் கூறினார். இதன்படி வீடு மற்றும் இதர உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தலுக்கு 261 கோடியே 54 லட்சம் ரூபாய், அவர்களது கல்வி மற்றும் வேலைவாய்ப்பினை உறுதி செய்திட 12 கோடியே 25 லட்சம் ரூபாய்

மற்றும் அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட 43 கோடியே 61 லட்சம் ரூபாய், மொத்தம் 317 கோடியே 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கைக்கு இலங்கையிலிருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்

அரசியல்வாதிகள், அரசியல் அவதானிகள், புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர் ஆதரவு தரப்புக்கள் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தொிவித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews