படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் 13வது நினைவு தின நிகழ்வு இன்று (08) திகதி மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மறைந்த ஊடகவியலாளர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபியில் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம் மற்றும் கிழக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மறைந்த ஊடகவியலாளர்களின் நினைவாக நிறுவப்பட்டுள்ள நினைவுத் தூபியில் நடைபெற்ற நினைவஞ்சலியில்
மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் மத தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு தீபச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தி ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினர்.
இன் நிகழ்வில் மறைந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலைக்கு நீதி கோரி அஞ்சலி உரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் லசந்த உட்பட படுகொலைசெய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களுக்கு சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.