கிளிநொச்சியில் இலவச குடிநீர் இணைப்பை பெறுவதற்கான அறிவித்தல்..!

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவின்  பொன்னகர் கிராம அலுவலர் பிரிவில் வாழ்கின்ற மக்கள்  தங்கள் வீடுகளுக்கான இலவச குடிநீர் இணைப்புக்கான விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்யது வழங்காது
விட்டிருப்பின் அவர்கள் எதிர்வரும் 17.01.2023 ஆம் திகதிகுள்
விண்ணப்பபடிவங்களை பூர்த்தி செய்து  தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் அலுவலகத்தில் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

உலக வங்கியின் நிதியுதவியின் கீழ் குடிநீர் சுகாதார மேம்பாட்டு
திட்டத்தின் கீழ் பொன்னகர் கிராம மக்களுக்கான இலவச குடிநீர்
விநியோகத்திற்கான நடமாடும் சேவையின் போது அலுவலர்கள் பொது மக்களின்
வீடுகளுக்கு வருகை தந்து விண்ணப்ப படிவங்களை வழங்கியிருந்தனர். ஆனால் சிலர் விண்ணப்ப படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அதனை இதுவரை சமர்பிக்கவில்லை.

எனவே குறித்த குடிநீர் விநியோக திட்டத்தை விரைவாக  பூர்த்தி செய்யவேண்டிய இருப்பதனால்  தங்களுக்குரிய இலவச குடிநீர் இணைப்புக்கான விண்ணப்ப படிவங்களை பெற்று சமர்பிக்காதவர்கள் மற்றும் இதுவரை விண்ணப்ப படிவங்களை
பெற்றுக்கொள்ளாதவர்கள் கிளிநொச்சி ஏ9 வீதி 155 ஆம் கட்டையில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையில்   விண்ணப்ப படிவங்களை பெற்று எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் கையளிகின்ற போதே இத் திட்டத்தின் ஊடாக
இலவச குடிநீரை பெற்றுக்கொள்ள முடியும் என்பதனையும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினர் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews