கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப் பணிமனைக்கு உட்பட்ட பாண்டிருப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள உளநல மறு வாழ்வு இல்லத்தில் தங்கியுள்ள விசேட தேவையடைய பிள்ளைகள் 17 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த நிலையம் எதிர்வரும் 09 ஆம் திகதிவரை 14 நாட்கள் தனிமைப்பத்தப்பட்டுள்ளதாக கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரப்பணிமனை தெரிவித்துள்ளது.
பாண்டிருப்பில் உளநலம் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியுள்ள மறுவாழ்வு இல்லத்தில் சிலருக்கு காய்ச்சல் இருப்பதாக சுகாதாரப் பிரிவினருக்கு தெரிவிக்கப்பட்டதை யடுத்துஅங்குள்ள 24 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட
அன்டிஜன் பரிசோதனையில் 17 பேர் கொரோனா தொற்றக்குள்ளாகியுள்ளனர்.
கல்முனை வடக்கு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஆர்.கணேஸ்வரன் தலைமையிலான பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், குடும்பநல உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் பிரதேசத்தில் கொரோனா தொற்றைக் கண்டறிவதற்கான அன்டிஜன் மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.