நெல்லியடி பொலிஸாசாரால் சட்டவிரோதமாக வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்றவர்கள் இருவர் கைது, வாகனம் கைப்பற்றல், 4 மாடுகள் மீட்பு…..!

நெல்லியடி பொலிஸாசாரால் சட்டவிரோதமாக வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்றவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதனை ஏற்றிவந்த வாகன சாரதி மரர்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதில் ஏற்றிவந்த 4 மாடுகளையும் மீட்டுள்ளதுடன் குறித்த வாகனமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.
பொலீஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகலவின் அடிப்படையிலேயே நேற்று இரவு (13/01/2023) மாடுகளை வாகனத்தில் ஏற்றி வீதியில் கொண்டு செல்வதற்க்குரிய அனுமதி பத்திரம் இன்றி கொண்டு சென்றமையாலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதுடன் வாகனமும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நடவடிக்கையில் நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விஜயவீர தலமையிலான
ஊழல்  தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உதவி பொலீஸ் பரிசோதகர் R.M.P.C ரத்தனாயக்கா,  பொலீஸ் சார்சஜன் ஏ.எம் ஏ.திலகரத்ன, பொலீஸ் கான்ஸ்ரபிள்கள் R.M.M.B.திலகசிறி
எஸ் ஜெகதீஸ்வரன் ஆகியோர் குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews