ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் 10 பேர் கடற்படையினரால் கைது

ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்ததாக கூறப்படும் இரண்டு கடற்தொழில் படகுகளை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர்

இதன்போது சந்தேகத்தின் பேரில் 10 பேர் நேற்று (16.01.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த படகுகள் கடலில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடல் வழியாக போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் பொருட்டு, இலங்கை கடற்படை கடலோர மற்றும் கடற்கரை பகுதிகளில் வழக்கமான கண்காணிப்பு மற்றும் செயல்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நிலையில் 23 கிலோ மற்றும் 235 கிராம் எடையுடைய 22 ஹெரோயின் பொதிகளுடன் பேருவளை கடற்பகுதியிலே படகு ஒன்றை கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர்.

இதன்போது படகில் இருந்தவர்கள் ஹெரோயினை கடலில் வீசியுள்ளனர்.

இதனையடுத்து மேற்கு கடற்பரப்பில் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற மற்றுமொரு கடற்தொழில் படகொன்றும் படையினரால் கைப்பற்றப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews