மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி.கலாமதி பத்மராஜா இன்று (17) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து நாளை (18) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுகவுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய கே.கருணாகரன் ஓய்வு பெற்றுச்சென்றதை தொடர்ந்து நிலவிய வெற்றிடத்திற்கு புதிய அரசாங்க அதிபராக திருமதி.கலாமதி பத்மராஜா அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த 2020 ஆண்டு ஜனவரி தொடக்கம் ஒக்டோடர் வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்த நிலையில் அவர் இடமாற்றம் செய்யப்பட்டு கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டார் இந்த நிலையில் மாவட்ட அரசாங்க அதிபராக கே.கருணாகரன் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் ஓய்வு பெற்று சென்றதையடுத்து திருமதி.கலாமதி பத்மராஜா மீண்டும் புதிய அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.