யாழில் கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டுபிடிப்பு

யாழ். தென்மராட்சி, சாவகச்சேரி டச்சு வீதியிலுள்ள கிணற்றிலிருந்து ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று (17.01.2023) பதிவாகியுள்ளது.

62 வயதுடைய மயில்வாகனம் கஜேந்திரன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் தனித்து வசித்து வந்த நிலையில் அவரை கடந்த 14ஆம் திகதி இரவு வரை சாவகச்சேரி நகரப் பகுதியில் காணப்பெற்றதாக பலர் தெரிவித்துள்ளனர்.

குளிக்கச் சென்ற வேளையில் தவறி கிணற்றில் விழுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

கிணற்றில் மூழ்கிய நிலையில் சடலம் ஒன்று இருப்பதை அவதானித்த அயலவர்கள் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews