“”விசுவமடு மேற்கு பகுதியில் நெற் கதிர்களை யானைகள் தொடர்ச்சியாக மேய்ந்து வரும் நிலை””

உடையார் கட்டு கமநல சேவை பிரிவுக்கு  உட்பட்ட விசுவமடு மேற்கு பகுதியில் பெரும்போக பயிர்ச்செய்கையில் 450 ஏக்கர் பெரும்போக  பயிர்செய்கையில் ஈடுபட்டு வரும் 20க்கும் மேற்பட்ட  விவசாயிகள்   தற்போதுபயிர்செய்கை மேற்கொள்ளப்பட்டு மூன்று மாதம் எட்டியுள்ள நிலையில் தற்பொழுது  நெற்  கதிர்கள் வரும் ஆரம்ப நிலையில் தொடர்ச்சியாக 15நாட்களுக்கு  மேலாக 5 தொடக்கம் 6 காட்டு யானைகள்  தொடர்ச்சியாக மாலை வேளைகளில் வந்து மீண்டும் அதிகாலை வரை தொடர்ச்சியாக நெட் கதிர்களை மேய்ந்து வருகிறது. காட்டுயானைகளை துரத்துவதற்கு பெரிதும்   சிறமப்படுவதாகவும்  பெரல்  தகரங்களைதட்டி  நெருப்பு தீ மூட்டி யானையினை விரட்டவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும்  வயல் நிலங்களில்  கொட்டகைகள் அமைத்து தங்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் . அத்துடன் பகல் வேலைகளில் மாடுகளின்  அட்டகாசம் மற்றும் குரங்கு நெடற் கதிர்களை மேய்ந்து வரும்  நிலையுள்ளது. ஒருபோதும் இல்லாதவாறு இம்முறை பெரும் போக பயிற்சியில் பல இன்னல்களை அனுபவித்து வருவதாகவும் பயிற்சிக்கு மேற்கொள்ளப்பட்ட சில நாட்களில் தண்ணீர் இல்லாமல் தான் சிரமப்பட்டதாகவும் பின்னர் சீரற்ற கால நிலைகாரணமாக நோய்த்தாக்கங்களின்  இருந்து விடுபடுவதற்கான பல லட்சம் ரூபாய் பெறுமதிக்கு கிருமிக்கு செலவிட்டபின்னர்  தற்பொழுது அறுவடைக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில் காட்டு யானைகளை அட்டகாசத்தினால் தொடர் அழிவை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர் .கடந்த சிறுபோக  அறுவடை செய்த நெல்லினை விற்பனை  செய்யமுடியாத நிலையில்  தற்பொழுது இன்று வரை களஞ்சியப் படுத்தி விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தற்பொழுது நெல்லினை கொள்வதுக்காக வருபவர்கள் 4000 ரூபாய் 5000 ரூபாய்க்கு நெல்லை கொள்வனவு செய்ய முடியும் எனவும் கூறிவரும்நிலையில் விவசாயிகள் தற்பொழுது பல வகைகளிலும் பாதிக்கப்பட்டு வருவதாகவும விவசாயிகள் ஆகிய எமக்கான உரத்தினை கிருமி நாசினி மற்றும் விவசாய உள்ளீடுகள்  என்பனவற்றை உரிய நேரத்தில் வழங்கி எமது அறுவடை காலத்தில் உரிய விலையில் நெல்லை கொள்வனவு  செய்யப்படுமாயின் வெளிநாடுகளில் இருந்து எமது நாட்டுக்கு அரிசியை இறக்குமதி செய்வதை நிருத்த முடியும் எம்மால் நமது பகுதியாக உள்ள பல ஏக்கர் வயல்  நிலங்களில் சிறந்த முறையில் உள்ளன அப்பகுதிகளில் சிறப்பாக  விவசாயம் மேற்கொள்ள முடியும் விவசாயிகள் ஆகிய  எமக்கான பாதுகாப்பினையும் விவசாயக் காண உள்ளீடுகளையும் உரிய முறையில் வழங்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை விவசாயிகளில் வேண்டுகோளாகும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews