பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்தவர் கைது

அம்பாறை மாவட்டத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்து வந்தாக கூறப்படும் சந்தேக நபர ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை – கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய, கடந்த செவ்வாய்க்கிழமை (24.01.2023) நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியேட்டர் வீதியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகியுள்ளார்.

இவ்வாறு கைதான நபர் அதே பகுதியை சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்கவராவார். அவரிடமிருந்து 1 கிராம் 50 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை விசேட அதிரடிப்படை கைப்பற்றப்பட்டுள்ளது.

இச்சோதனை நடவடிக்கையின் போது, விசேட அதிரடிப்படையின் கட்டளை அதிகாரி பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜெயசுந்தரவின் பணிப்புரைக்கமைய, அம்பாறை பதில் வலயக்கட்டளை அதிகாரி பொலிஸ் அத்தியட்சகர் ஏ.டீ.டீ நெத்தசிங்கவின் அறிவுறுத்தலுக்கமைய, மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.சி வேவிடவிதான ஆகியோரின் வழிகாட்டலில், கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எம்.பி.பி.எம் டயஸ் தலைமையிலான உப பொலிஸ் பரிசோதகர் எச்.ஜி.பி.கே நிஸ்ஸங்க பொலிஸ் சார்ஜன்ட் பண்டார (13443) சிந்தக (75492) உள்ளிட்ட பொலிஸ் கன்டபிள்களான அபேரட்ன (75812) சிமேஸ்(90699) சங்க (101078) சாரதி குணபால (19401) உள்ளிட்ட அதிகாரிகள் இந்நடவடிக்கையை முன்னெடுத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் நிந்தவூர் பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன், விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews