எங்களை மடையர் என்று நினைக்காதீர்கள் என யாழ்ப்பாண மாநகர சபையின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரன் முதல்வர் ஆனோல்டை நோக்கி தெரிவித்தார்
கடந்த டிசெம்பர் மாத அமர்வானது திடீரென்று நிறுத்தப்பட்டமை தொடர்பில் இன்றைய தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் கிருபாகரனால் சபையில் கேள்வி எழுப்பப்பட்டது
முன்னாள் முதல்வரின் உடல்நிலை சரியின்மையினால் குறித்த கூட்டம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது அவ்வாறு முதல்வருக்கு உடல்நிலை சரியில்லை எனில் வேறு ஒருவர் சபையினை தலைமை தாங்கி நடாத்தியிருக்க முடியும் எனவே டிசம்பர் மாதம் அமர்வு நடத்தப்படாமைக்குரிய காரணம் நமக்கு தெரியப்படுத்தப்படவேண்டும் எனகேள்வி எழுப்பினர் குறித்த விடயம் தொடர்பில் உரையாற்றும் போது எங்களை மடையர் என்று நினைக்காதீர்கள் முதல்வர் மாத்திரம் இந்த மாநகர சபையின் உறுப்பினர் அல்ல ஏனைய உறுப்பினர்கள் நாங்கள் இருக்கின்றோம் எங்களை மடையர் என நினைக்காதீர்கள் என முதல்வரை நோக்கி விளாசி தள்ளினர்.