யாழ்ப்பாணம் வடமராட்சி திக்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு கொள்ளையிடப்பட்ட 17 பவுண் தங்க நகைகள் பருத்தித்துறை போலீசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவு.
நேற்று முன்தினம் இரவு வடமராட்சி திக்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் புகுந்து அங்கு கொள்ளையிடப்பட்ட 17 பவுன் தங்க நகைகளை பருத்தித் துறை போலீசார் நேற்று பிற்பகல் மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் கொள்ளையிடப்பட்ட நகைை நெல்லியடி பகுதியில் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடகு வைப்பதற்கு முற்பட்டவளேயை பருத்தித்துறை பொலீசாரல் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளான்.
இதன் போது குறித்த சந்தேக நபர் வசமிருந்த 17 பவுன் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்துவதற்கு போலீசாரால் நடவடிக்கை மேற்கொண்து வருகின்றனர்.
குறித்த நடவடிக்கையில் பருத்தித்துறயு பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை போலீஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க, உப பொலீஸ் பரிசோதர்களான குமாரசிறி, விராஜ், போலீஸ் சார்ஜன்களான குமார, ஒளிவேரா,
போலீஸ் காவலர்களான ஆர்.திருச்செல்வம், அபயரத்தின, மதுசன், இந்திக்க, நந்தசேன, ஜெயநித்தி, மற்றும் பெண் போலீஸ் காவலர்களான ஆயிஷா, கிமானி, மதுசானி ஆகியோர் ஈடுபட்டனர்.