லாஃப்ஸ் எரிவாயுவின் விலையும் திருத்தப்படும்! நாளை இறுதி தீர்மானம்

லாஃப்ஸ் எரிவாயுவின் விலையிலும்  திருத்தம் மேற்கொள்வதற்கு  அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாளை (06.02.2023) இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது 12.5 கிலோகிராம் எடை கொண்ட உள்நாட்டு சமையல் எரிவாயு கொள்கலன் விலை 5,080 ரூபாவாகும்.

இதேவேளை, லிட்ரோ நிறுவனம் இன்று (05.02.2023) தமது எரிவாயு விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.

அதற்கமைய 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டு அந்த புதிய விலையாக 4,743ரூபா அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 134 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 1,904 ரூபா எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews