மோசமான பேரழிவு -துருக்கி அதிபர் வர்ணிப்பு – பலி எண்ணிக்கை 2300 ஐ கடந்தது

துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் இடம்பெற்ற சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2300 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்திற்கும் அதிகம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

துருக்கியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1500 பேர் உயிரிழந்துள்ளதாகவும் சிரிய பகுதியில் 810 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பனிமூட்டமான காலநிலை காரணமாக மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பல தசாப்தங்களில் துருக்கியின் மோசமான பேரழிவு இது என்று அந்நாட்டு அதிபர் எர்டோகன் கூறினார்.

நிலநடுக்கவியலாளர்கள் கூறுகையில், முதல் நிலநடுக்கம் துருக்கியில் இதுவரை பதிவு செய்யப்படாத மிகப்பெரிய நிலநடுக்கங்களில் ஒன்றாகும். அதிர்வு நிற்க இரண்டு நிமிடங்கள் ஆனதாக உயிர் பிழைத்தவர்கள் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews