முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிக்கும் நடவடிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், இது தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஊடகம் ஒன்று தகவல் வினவியுள்ளது.
அங்கு தாம் எதிர்க்கட்சித் தலைவர் என்பதுடன் அக்கட்சியுடன் தொடர்புடைய அரசியல் முன்னணியின் தலைவரும் தான் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.
எனவே கட்சி எடுக்கும் தீர்மானத்திற்கு தலைவணங்குவதே தமது கொள்கை எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனினும் சமகால பிரதமர் தினேஷ் குணவர்தன தனது கடமைகளை சிறப்பாக செய்து வருகிறார். அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை என மஹிந்த மேலும் தெரிவித்துள்ளார்.