தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு ஆயுட்தண்டனை விதிக்கப்பட்ட, தமிழ் அரசியல் கைதியான செல்லையா சதீஸ்குமார் விடுதலை செய்யப்பட்ட போதிலும், அவர் தொடர்ந்தும் சிறையிலேயே வாடுகிறார் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
சதீஸ்குமாருக்கு கடந்த முதலாம் திகதி பொது மன்னிப்பு ஜனாதிபதியால் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மேன்முறையீடு வழக்கால் இவரின் விடுதலை தடைப்பட்டிருந்தது.
இந்நிலையில், சதீஸ் விடுதலை செய்யப்பட்டார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையிலேயே, மேன்முறையீட்டு நீதிமன்றின் வழக்கில் நீதிபதிகள் இதுவரை ஒப்பமிடவில்லை.
இதனால், அவர் தொடர்ந்தும் சிறையிலேயே இருக்கிறார் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.