அம்பாறை நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் லேகியம் விற்பனை செய்யப்படுவது அதிகரித்துச் செல்வதாக, நிந்தவூர் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைய,
நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ. எம்.நஜீமின் ஆலோசனையில் சிறு குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரியும் உப பொலிஸ் பரிசோதகருமான குணரட்ன மற்றும் பொலிஸ் விசேட புலனாய்வு
பிரிவினர் இணைந்து முன்னெடுத்த நடவடிக்கையின்போது, லேகியத்துடன் முதியவரொருவர் கைது செய்யப்பட்டார்.
அம்பாறை கல்முனையில், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த, பாதணி விற்பனை நிலையமொன்றில் பணியாற்றிய இளைஞன்
100; போதை மாத்திரைகளுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு காத்தான்குடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞனே கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடமிருந்த தொலைபேசியை விசேட அதிரடிப்படையினர் பாரமெடுத்தபோது, போதை மாத்திரை விற்பனை நடவடிக்கை தொடர்பில் இளைஞனின் தொலைபேசிக்கு தொடர்ச்சியான அழைப்புக்கள் வந்ததாக, விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை பெரியநீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் அமைந்துள்ள வாகன புகை பரிசோதனை நிலையத்திற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமாக நடமாடிய
இளைஞனிடமிருந்து 1 கிராம் 80 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளை கல்முனை விசேட அதிரடிப்படையினர் மீட்கப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேக நபர் பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்களுக்கு நீண்ட காலமாக ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்து வந்தமை, விசாரணைகளின் போது
தெரியவந்துள்ளது.