பிரதமர் தினேஸ் குணவர்தன பதவி விலகப்போவதாகக் கூறப்படும் செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்று பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பிரதமரின் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமரை பதவி விலகுமாறு எந்தக் கட்சியும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அரசாங்கம் முன்னெடுத்து செல்லும் வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதற்காகவே இவ்வாறான வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.