
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், எரிவாயு விலையை உயர்த்தப்போவதில்லை என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ள போதிலும் எரிவாயு விலையில் திருத்தம் செய்யவேண்டிய அவசியமில்லை என அதன் தலைவர் முதித்த பீரிஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போதுவரை இருந்த எரிவாயு விலை, அவ்வாறே தொடரும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.