மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாச்சாலையில் உள்ள கதைகளை திருடி விற்பனை செய்துவந்த அங்கு கடமையாற்றி வந்த காவலாளி ஒருவரை நேற்ற புதன்கிழமை ((8) கைது செய்ததுடன் களவாடப்பட்ட 40 கதிரைகளை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி.எம்.பி.ஆர் பண்டார தெரிவித்தார்.
குறித்த ஆசிரியர் கலாச்சாலையில் நிர்வாகம் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 20 ம் திகதி கணக்கு எடுத்த நிலையில் மீண்டும் கடந்த 3ம் திகதி கணக்கு எடுத்த நிலையில் 34 பிளாஸ்பிக் கதிரைகள் 6 மரக்கதிரைகள் உட்பட 40 கதிரைகள் காணாமல் போயுள்ளதை கண்டு பிடித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் ரி.எம். எஸ்.கஜநாயக்கா தலைமையிலான பொலிஸ் சாஜன் ரகுமான் 64832, பொலிஸ்கொஸ்தாப்பர்களான லலித் 6255, ரணதுங்கா 99833 ஆகிய பொலிஸ் குழவினர் மேற்கொண்ட விசாரணையில் ஆசிரியர் கலாச்சாலையில் கடமையாற்றிவரும் 47 வயதுடைய புதூரைச் சேர்ந்த காவலாளி ஒருவரை கைது செய்தனர்.
இவர் தினமும் கடமைமுடிந்து வீட்டுக்குச் செல்லும் போது ஒவ்வொரு கதிரைகளை திருடிக் கொண்டு சென்று அந்த பகுதியிலுள்ள கடை ஒன்றில் பிள்ளைக்கு மருந்துவேண்ட பணம் தேவை எனவும் தனது வீட்டக்கதிரை எனவும் தெரிவித்து பிளாஸ்ரிக்கதிரை ஒன்றை 700 ரூபாவுக்கும் மரக்கதிரையை 2 ஆயிரம் ரூபா வீதம் விற்பனை செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்ட கதிரைகளை மீட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட காவலாளியை இன்று வியாழக்கிழமை (9) மட்டக்களப்பு நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.