யாழ்ப்பாணம் 511 படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய பிரிக்கேடியர் யூட் பெனார்ண்டோ கடந்த வெள்ளிக்கிழமை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணியகத்தின் தலைமை அதிகாரிகளில் ஒருவராக இடம் மாற்றம் பெற்று சென்றுள்ளார்.
இவர் யாழ். மாவட்டத்தில் கடமையாற்றிய போது பல இந்து மற்றும் கிறித்தவ தேவாலயங்களை புனரமைப்பதில் முன் நின்று செயற்பட்டவர்.
அது மட்டுமல்லாது கர்ப்பிணி பெண்களுக்கு உலர் உணவுகளை வழங்குதல், இரத்த தானம், COVID 19 வைத்தியசாலை நிர்வாகம், மாணவர்களுக்கான கருத்தரங்குகள், தேவையுடைய வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட குடும்பங்களுக்கான வீட்டு நிர்மாணம் போன்றவற்றை சமூக முன்னேற்றம் கருதி முன்நின்று செய்த ஓர் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.