நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து உழைக்கும் போதே செலுத்தும் வரியை அறவிடுவதற்கான இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள குறித்த வரியை நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து அறவிடுவதற்குத் தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் மற்றும் நீதிச் சேவை அதிகாரிகளின் சங்கம் என்பன இணைந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளன.
குறித்த மனு மீதான விசாரணையின் போது அதனை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், எதிர்வரும் 22ம் திகதி விசாரணைக்கு நாள் குறித்துள்ளது.அதுவரை நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து வரியை அறவிடுவதற்கான இடைக்காலத் தடையும் நீடிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் மரிக்கார் ஆகிய நீதிபதிகள் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளனர்