மக்கள் வங்கியுடனான தமது கணக்குகளை மூடுவதற்கு எந்தவொரு அரச நிறுவனத்திடமிருந்தும் கோரிக்கைகள் அல்லது அறிவுறுத்தல்கள் எதுவும் கிடைக்கவில்லை என மக்கள் வங்கி இன்று அறிவித்துள்ளது.
அரச நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான தவறான செய்திகளை தெளிவுபடுத்தும் வகையில் மக்கள் வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அனைத்து பொது மற்றும் தனியார் துறை வாடிக்கையாளர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மக்கள் வங்கி நன்கு வசதிகளைக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அரச வங்கிகளில் மாத்திரம் பேணப்பட்டு வந்த அரச நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளை தனியார் வங்கிகளில் ஆரம்பிக்க நிதியமைச்சு வியாழக்கிழமை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்கள் அனைத்தும் அரச வங்கிகளில் தான் தங்களுடைய கணக்குகளை வைத்திருக்கின்றார்கள். அரச வங்கி என்பது அரசாங்கத்தினுடைய வங்கி, அவர்களுடைய இலாபங்களை திறைசேறிக்கு கொடுக்கின்றார்கள், எனவே அரச வங்கிகளின் கணக்குகளை மூடுவதற்கு எந்த ஒரு சூழலிலும் அரசு முடிவுகளை எடுக்காது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஸ்ட பேராசிரியர் கலாநிதி அமிர்தலிங்கம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.