நியுஸிலாந்தின் ஓன்லேன்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த மொஹமட் சம்சுதீன் ஆதில் எனும் 32 வயதுடைய குறித்த நபர் நேற்று முன்தினம் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டிருந்தார்.
காத்தான்குடி பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் 2011 ஆம் ஆண்டு நியுஸிலாந்திற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.