உதயகலா என்பவர் பொய்யானதும் உண்மைக்கு புறம்பான பல தகவலை வெளியிட்டு கபட நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளார்

போராட்டத்தை குழப்புவதற்காகவே அரசாங்கத்துடன் இணைந்து சர்வ மக்கள் கட்சியை சேர்ந்த உதயகலா என்பவர் பொய்யானதும் உண்மைக்கு புறம்பான பல தகவலை வெளியிட்டு கபட நாடகம் ஒன்றை அரங்கேற்றியுள்ளதாக வவுனியா மாவட்ட வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  உறவுகளின் சங்கத்தின் செயலாளர் சிவானந்தன் ஜெனிதா குற்றம் சுமத்தியுள்ளார்.
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் சங்கத்தினர் நேற்று யாழ் ஊடக அமையத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகசந்திப்பில் இவ்வாறு குற்றம் சுமத்தியிருந்தார். அங்கு மேலும் தெரிவிக்கையில்,
யுத்தம் இடம்பெற்ற காலத்திலே தமிழினத்தின் துரோகியாக காணப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க இன்றும் துரோகத்தனமான நரி தந்திரமான செயல்களை முன்னெடுத்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு இடையில் பிளவுகளை ஏற்படுத்தும் முயற்சியை தற்போது மீண்டும் முன்னெடுத்துள்ளார்.
உதயகலாவே தனது கணவர் கடத்தப்பட்டிருந்ததாகவும் இறந்து விட்டதாகவும் கூறியிருந்ததாகவும் தற்போது தனது கணவர் இறக்கவில்லை என்றும் உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்ட ஊடகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக குறிப்பிடுகின்றார். இது ரணில் அரசுடன் இணைந்து முன்னெடுக்கும் ஒரு கபட நாடகம்.
நாடு பொருளாதார ரீதியில் வங்குரோத்து அடைந்த போதும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வாழ்வாதாரத்திற்காக போராடவில்லை என்றும் தமது உறவுகளை மீட்பதற்காக சர்வதேச நாடுகளின் உதவியை கோரியே இன்றுவரை போராடுவதாகவும் சிவானந்தன் ஜெனிதா மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews