இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இன்று பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் முறையே 313.52 ரூபா மற்றும் 336.09 ரூபாவாக மாறாமல் உள்ளது.
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை கடந்த வெள்ளிக்கிழமை 314.16 ரூபாவாக காணப்பட்ட நிலையில் இன்று 314.27 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை விற்பனை விலையானது 332.50 ரூபாவாக மாறாமல் உள்ளது.
மேலும் சம்பத் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் முறையே 315 ரூபா மற்றும் 330 ரூபாவாக மாறாமல் உள்ளது.