போலி இணையத்தளத்தை உருவாக்கி போலி விசா – 29 வயது இளைஞன் கைது..!

போலி இணையத்தளத்தை உருவாக்கி விசா வழங்கிய சந்தேகநபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கொழும்பில் உள்ள இந்திய விசா நிறுவகத்தின் கிளையொன்று கண்டி காவல்துறை பிரிவுக்குட்பட்ட கோபல்லவ மாவத்தை பகுதியில் செயற்பட்டுள்ளது. குறித்த சந்தேக நபரால் அந்த நிறுவனத்தின் தகவல்களுடன் இணையத்தளம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

சில காலமாக வீசா வழங்குவதாக மக்களிடம் மோசடியாக பணம் பெற்று வந்த சந்தேகநபர் கடந்த மார்ச் 28 ஆம் திகதி வத்தேகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.

இதன்போது மடிக்கணினி மற்றும் கைத்தொலைபேசி என்பனவும் மீட்கப்பட்டன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பன்வில பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடையவராகும்.

ஆள்மாறாட்டம், மோசடி, அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றங்கள் மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் செய்யப்பட்ட குற்றங்களுக்காக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் நேற்று முன்னிலைப்படுத்தபட்ட நிலையில் எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews