இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். கலாச்சார மத்திய நிலையத்தில் கலை நிகழ்கள்!

இந்திய கலாசார உறவுகளுக்கான பேராயம் ( ICCR) தலைவர் முனைவர் வினய் சஹஷ்ரபுத்தே  அவர்களின் யாழ்ப்பாண வருகையை முன்னிட்டு விசேட கலை நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இக் கலை நிகழ்கள் இடம்பெற்றன.
இதன் போது  இலங்கை இந்திய பிரமுகர்கள் மற்றும் விருந்தினர்கள் மற்றும் மதத் தலைவர்கள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.
இதன் போது  முனைவர் வினய் சஹஷ்ரபுத்தே அவர்களிற்கு வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து கௌரவித்தார்.
இதன் போது யாழ். சக்ஸபோன் சகோதரர்களின் இசை நிகழ்வும் சேர் பொன் இராமநாதன் அரங்காற்று மற்றும் கட்புல கலைகள் பீட் நடனத்துறை மாணவர்களின் நடன நிகழ்வும் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மற்றும் அம்பாந்தோட்டை இந்திய தூதரக மற்றும் துணைத் தூதரக அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் மதத் தலைவர்கள் கலைஞர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews