கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்றவும் முடிவு

கிளிநொச்சி மகாவித்தியாலய பிரதான வீதியில் காணப்படும் ஆபத்தான 18 மரங்களை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. குறித்த பாடசாலை வளாகத்திலும், பாடசாலைக்கு முன்பாகவும் நேற்றைய தினம் முறிந்து விழுந்த மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கை மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், ஆபத்தானதாக அடையாளம் காணப்பட்ட 18 பாடசாலை வீதியோர மரங்களை அகற்றவும் முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்றைய தினம் குறித்த பாதிப்புக்கள்  தொடர்பில் ஆராய்வதற்காக அப்பகுதிக்கு சென்ற மாவட்ட இடர் முகாமைத்துவ நிலைய பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், அரச மரக்கூட்டுத்தாபன அதிகாரிகள், நீர்பாசன திணைக்கள அதிகாரிகள், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் நிலைமைகளை பார்வையிட்டனர்.
 

Recommended For You

About the Author: Editor Elukainews