சிவப்பு சீனி மற்றும் பயறு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

சிறிலங்கா அரசாங்கத்திடம் இறக்கமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அதற்கமைய பச்சைப் பயறு மற்றும் சிவப்பு சீனி என்பவறை இறக்கமதி செய்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆகவே பயறு மற்றும் சிவப்பு சீனியின் இறக்குமதி தடையை நீக்கி,  அவற்றை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு அத்தியாவசிய உணவு இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் ஒன்றிய ஊடகப் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றுள்ளதால் பொருட்களின் விலைகள் 10% முதல் 12% வரை குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் இந்த பொருட்களின் விலை உயர்வை கருத்தில் கொண்டு சுங்க வரி விதிக்க வேண்டும் அல்லது உரிய அனுமதி வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews