மருந்தாளர்கள் கடமைக்கு வராமை காரணமாக நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருப்பு…!

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் மருந்தாளர்கள் கடமைக்கு சமூகமளிக்காமை  காரணமாக நோயாளர்கள் நீண்ட நேரம் காத்திருந்த சம்பவம் இன்று நீரிழிவு நோயாளர் சிகிச்சை பிரிவில்  இடம்பெற்றுள்ளது.
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நீரிழிவு நோய் கிளினிக் வாராந்தம் புதன்கிழமைகளில் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினமும்  சுமார் 500 இற்கு மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சைக்காக வருகை தந்திருந்தனர்.
இந்நிலையில் இன்று புதன்கிழமை(05) இடம்பெற்ற கிளினிக்கில் வைத்தியர்கள் வருகை தந்து நோயாளர்களை பார்வையிட்ட பின்னர் தமக்குரிய மருந்துகளை மருந்தகத்தில் பெறுவதற்க்கு காலை 9:15 காத்திருந்த நிலையில் மருந்தாளர்கள் கடமைக்கு சமூகமளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து நோயாளர்கள் வைத்திய அத்தியட்சகரிடம் நேரடியாக சென்று மருந்தாளர்கள்  வரவில்லையெனவும், தாம் நீண்ட நேரமாக காத்திருப்பதாகவும் தெரிவித்ததை அடுத்து ஒரு மருந்தாளர் கடமைக்கு வந்து நோயாளர்களுக்கு மருந்துகளை வழங்கினர்.
இவ்வாறான சம்பவங்கள் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில்  தடவைகள் இடம்பெற்றுள்ளன.இவ்வாறன  நிலமைகளில்  வைத்தியசாலை  அத்தியட்சகரிடம் நோயாளர்கள் முறையிடுட்டும் வந்துள்ளனர்.
ஆனாலும் கிளினிக் நாட்களில் நோயாளர்கள் வடமராட்சி கிழக்குப் பகுதிகளில் இருந்து பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து அதிகாலை 4:00 மணிக்கெல்லாம் வருகை தந்து சிகிச்சைக்காக காத்திருப்பது வழக்கமாகியிருக்கிறது.
அதி தூரத்தில் இருந்தும், பல மணி நேரமாக காத்திருக்கும் நோயாளர்களுக்கான மருந்து வழங்குவதில் மருந்தாளர்களின் அசமந்தப் போக்கால் பல நோயாளர்கள் பல்வேறு இன்னல்களுக்கும்  மன உளைச்சலுக்கும்  ஆளாகி வருகின்றனர். இதில் வயோதிபர்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே கிளினிக்குகளிற்கு வரும் நோயாளர்களுக்கு நேர காலத்திற்கு, மருந்தாளர்கள் வருகைதந்து  மருந்துகளை வழங்க  வேண்டும் என்பதே நோயாளர்களின் எதிர்பார்ப்பும் வேண்டுகோளாகவும் உள்ளது.
இவ்வாறான மருந்தாளர்கின் சீரற்ற நடவடிக்கையினை யாழ் பிராந்திய சேவைகள் பணிப்பாளர் மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கவனத்தில் எடுக்க வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews