40 எரிபொருள் நிலையங்கள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! அமைச்சர் கஞ்சன அறிவிப்பு

QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அமைச்சர் கஞ்சன விஜேசேகர பதிவிட்டுள்ளார்.

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெட்ரோலிய சேமிப்பு முனைய நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இன்று காலை கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

இதில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து டுவிட்டரில் அமைச்சர் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் மேலும், எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான அனைத்து எரிபொருள் தாங்கிகளுக்கும் GPS கண்காணிப்பு அமைப்பு பொருத்தப்படும்.

முதலில் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தாங்கி ஊர்திகளுக்கு GPS அமைப்பு பொருத்தப்படும். அதன்பின்னர் அனைத்து தனியார் தாங்கிகளுக்கு அவை பொருத்தப்படும்.

அனைத்து எரிபொருள் நிலையங்களும் குறைந்தபட்சம் 50% சேமிப்பு கொள்ளளவை பராமரிக்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், QR ஒதுக்கீட்டை தொடர்ந்து கடைப்பிடிக்காத 40 எரிபொருள் நிலையங்களை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews