மட்டக்களப்பில் கோவில் உடைத்து திருட்டு சைக்கிள் திருட்டு மற்றும் மாமனாரை கோடரியால் தாக்கிய மருமகன் உட்பட வெவ்வேறு சம்பவங்களில் 3 பேர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு சம்பவங்களான கோவிலில் இரும்பு கம்பி திருடிய ஒருவர் மற்றும் துவிச்சக்கரவண்டி திருடிய ஒருவர் உட்பட மாமானாரை கோடரியால் தாக்குதல் மேற்கொண்ட சம்பவத்துடன் தொடர்புடைய 3 பேரை நேற்று புதன்கிழமை (5) இரவு கைது செய்துள்ளாக பொலிசார் தெரிவித்தனர்.

ஊறணியிலுள்ள கொத்துக்குளத்து மாரியம்மன் ஆலையத்தினுள் சம்பவதினமான நேற்று இரவு 10 மணியளவில் உள்நுழைந்த திருடன் ஒருவன் அங்கு கோபுர கட்டிட புனரமைப்பிற்காக வைக்கப்பட்டிருந்த  இரும்பு கம்பிகளை திருடிக் கொண்டு இருந்தபோது காவில் காவலாளி பொலிசாருக்கு தெரிவித்ததையடுத்து திருடன் கம்பிகளை திருடிக் கொண்டு வெளியே வரும் போது நாவற்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞன திருடனை பொலிசார் மடக்கி பிடித்து கைது செய்ததுடன் 10 இரும்பு கம்பிகளை மீட்டனர்.

அதேவேளை சீலாமுனை பகுதியில் துவிச்சக்கரவண்டி ஒன்றை திருட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கூளாவடி பிரதேசத்தைச் சோந்த 60 வயதுடைய ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து திருடப்பட்ட 2 துவிச்சக்கரவண்டிகளை மீட்டனர்.

இதேவேளை புதூர் பிரதேசத்தில் கடந்த மாதம் 4ம் திகதி   மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் காரியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற 65 வயதுடைய மாமனாரை கோடாரியால் தாக்குதல் நடாத்திவிட்டு தலைமறைவாகி வந்த 44 வயதுடைய மருமகனை கைது செய்தனர்.

இந்த வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews