மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள மரப்பாலம், புல்லுமலை, கரடியனாறு, போன்ற பிரதேசங்களில் காட்டுயானை குடிமனைகளுக்குள் புகுந்து கடந்த 2 மாதங்களில் 20 வீடுகளை உடைத்தும் பல ஏக்கர் பயிர்களை சேதப்படுத்தியுள்ளது எனவே இந்த யானைகளிடம் இருந்து மனித உயிர்களை பாதுகாத்து தருமாறு கோரி பிரதேச பொது அமைப்புக்கள் உதவி அரசாங்க அதிபரிடம் நேற்று வியாழக்கிழமை (6) கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதயம் கமநல அமைப்பு , சின்ன புல்லுமலை மரண உதவிச் சங்கம், மரப்பாலம் கமநல அமைப்பு. சின்ன பல்லுமலை கிராம அபிவிருத்தி சங்கமங்களின் தலைவர் செயலாளர்கள் ஒன்றினைந்து யானைகளில் இருந்து மனித உயிர்களை காப்பாற்றி தருமாறு கோரிய மகஜரை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் வைத்து உதவி அரசாங்க அதிபர் திருமதி தர்ஷpனியிடம் கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
செங்கலடி பதுளை ஏ 5 பிரதான வீதியில் அமைந்துள்ள பிரதேசங்களிலுள்ள குடிமனைகளுக்குள் காட்டுயானை உட்புகுந்து வீடுகளை உடைத்து சேதப்படுத்துவது மற்றும் பயிர் செய்கைகளை துவசம் செய்துவருகின்றது இதனால் பிரதேச மக்கள் தினம் தினம் உயிரை பயணம் வைத்து அச்சத்தில் வாழ்ந்து வருகின்றதுடன் சிறுவர்கள் பயத்தின் மத்தியில் இரவு பொழுதை கழித்து வருகின்றனர்.
அதேவேளை இந்த பிரதேசத்தைச் சேர்ந்த பல குடும்பங்களின் ஜவனோபாய டிதாழிலான விவசாயமான பயர் செய்கைகளையே செய்து வாழந்து வருகின்றனர் இந்த நிலையில் காட்டுயானைகள் குடிமனைகளுக்குள் புகுந்து வீடுகளை உடைத்து துவசம் செய்வதுடன் பயிர் செய்கைகளை துவசம் செய்வதுடன் தென்னை பலா போன்ற மரங்களை முறித்து அழித்து வருகின்றதுடன் யானை தாக்குதலுக்கு உள்ளாகி கடந்த 3 மாதத்தில் 3 உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்வாறு தினம் தினம் இரவு பகலாக யானைகளின் அட்டகாசத்தினால் கால்நடை வளர்ப்போர் மற்றும் அந்த பகுதியால் போக்குவரத்தில் ஈடுபடுவோர் பாடசாலை மற்றும் தனியார் வகுப்புக்களுக்கு செல்லும் மாணவர்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.
அதேவேளை பராமரிப்புக்கள் அற்ற காணிகளில் உள்ள பற்றைக் காடுகளில் பகல் வேளைகளில் யானை தங்கி நிற்கின்றது எனவே அந்த பற்றைக்காடுகளை வெட்டி துப்பரவு செய்ய நடவடிக்கை எடுக்கவும் .
அவ்வாறே காட்டுயானைகளை வனவிலங்கு அதிகாரிகள் மூலம் காட்டுக்குள் விரட்டியடிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதுடன் இந்த பகுதியில் வனவிலங்கு பாதுகாப்பு திணைக்கள காரியாலயம் ஒன்றை அமைத்து யானைகளிடமிருந்து எமது உயிர்களையும் பயிர் செய்கைகளையும் பாதுகத்து தரவேண்டும் என் கோரிக்கையடங்கிய மகஜர் ஒன்றை கையளித்துள்ளதாகவும் இந்த கோரிக்கைகளை உடனடியாக சம்மந்த பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்து செயற்படுத்தி தருவதாக உதவி அரசாங்க அதிபர் உறுதியளித்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.