கொம்பனிகளிற்குள் அடிமையாகி நாங்கள் இயல்பற்ற மக்களாக மீளவும் சுதந்திர போர் ஒன்றில் ஈடுபடுமளவிற்குகூட இந்த மக்கள் தள்ளப்படலாம் என இரணைமடு விவசாய சம்மேளனத்தின் செயலாளர் முத்து சிவமோகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் காலபோகத்திற்கான உரம் உள்ளிட்ட உள்ளூடுகள் வழங்குதலை தனியாரிடம் கையளிப்பது தொடர்பில் அரசு எடுத்துள்ள நடவடிக்கை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் ஊடகவிலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த ஊடகவியலாள் சந்திப்பு நேற்று காலை 9 மணியளவில் பன்னங்கண்டி கமக்காரர் அமைப்பின் அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரணைடு நீர் பாய்ச்சல் திட்டத்தின் கீழ் சிறுபோக செய்கைக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற இந்த வேளையிலே விவசாய அமைச்சர் சில தகவல்களை வெளியிட்டுக்கொண்டிரு
அந்த வகையில், காலபோகத்திற்கான உள்ளீடு விடயங்களை தனியார் மயமாக்கி அவர்கள் ஊடாகவே விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான முயற்சிகள் உள்ளதாக தகவல்களை வெளியிட்டிரு க்கின்றார்.
உண்மையில் இந்த சிறுபோக பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கா ன உள்ளீடுகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் முழுமையடையாத நிலையில், கடந்த வருடம் அறுவடை செய்த நெல்லைக்கூட நியாயமான விலையில் விற்க முடியாத நிலையில் அவ்வாறான தளம்பல் நிலைக்குள் தனியார் நிறுவனங்கள் எங்களிடமிருந்து உள்ளீடுகளை கொள்வனவு செய்தாலோ அல்லது எங்களுடைய உற்பத்தி பொருட்களை அவர்கள் கொள்வனவு செய்தாலோ, எந்தவொரு நிதானமற்ற விலை நடைமுறைகளாலும் ஏகபோக தன்மையுடன் விவசாய சமூகத்தை பாதிப்படைய செய்யும் செயற்பாடுகள் கடந்த காலத்திலும் தற்பொழுதும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இவ்வாறான சூழலில் இலங்கை தனது கொள்கையாக தனியார் மய்படுத்தலிற்குள் இறங்கிக்கொண்டிருக்கின்ற இந்த வேளையிலே, கடந்த முன்னாள் ஜனாதிபதி விவசாயிகள் மற்றம் விவசாயத்தின் மீதான மேலெழுந்தவாரியான தீர்மானங்களை எடுத்ததன் காரணமாக இன்று அவர் பதவியை விட்டு விலகிய நிலையில் இருக்கின்றார்.
தற்போதுள்ள அரசும் அனைத்தையும் தனியார் மயப்படுத்தலில்ஈ விவசாயத்திலும் தனியார் மயப்படுத்துவதற்கான எடுக்கும் முயற்சிகள் மூலம் தற்பொழுது உள்ள ஜனாதிபதிக்கும் எதிர்காலத்தில் எவ்வாறான நிலை ஏற்படும் என்பதை திடகாத்திரமாக எதையும் கூற முடியாவிட்டாலும், இந்த தனியார் மயமாக்கல் ஒன்றின் ஊடாக நாட்டை வளப்படுத்துமா அல்லது மோசமான நிலைக்கு கொண்டு செல்லுமா என்பதை வரையறைப்படுத்தி கூறமுடியாவிட் டாலும், இன்று இந்தியாவில் அதானி கொம்பனிக்கு எதிராக இந்திய மண்ணிலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற போ ராட்டங்கள் அதனால் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் பற்றி எண்ணுகின்றபொழுது, அதேபோன்றதான நிலை எமக்கும் ஏற்படுமா என்ற அச்ச சூழ்நிலை எமக்கு எறு்பட்டுக்கொண்டிருக்கி ன்றது,
அதேவேளை, இந்தியாவில் அவ்வாறான போராட்டங்களை நடார்த்தக்கூடிய சூழலைக்கூட இந்த மண்ணில் நடார்த்த முடியாத வகையில் சட்ட ஏற்பாடுகளையும் செய்துகொண்டு இலங்கை அரசு நகர்ந்துகொண்டிருக்கின்றது. இவ்வாறான செயற்பாடுகளை நாடாளுமன்றத்தில் இருக்கின்ற கௌரவ உறுப்பினர்கள்கூட தாங்கள் தாங் கள் தங்களுக்கேற்ற கருத்துக்களை முன்வைக்கின்றார்களேயன்றி இந்த மண்ணில் வாழந்துகொண்டிருக்கின்ற மக்கள் சார்ந்த மக்களின் வாழ்வியல், சுதந்திரம், எதிர்காலம் பற்றிய சிந்தனைகளோடு கருத்துக்களை பதி விடுவதாக தெரியவில்லை.
தனியார் கொம்பனிகளிடம் எங்களுடைய அனைத்து பொறுப்புக்களையும் அரசு ஒப்படைக்குமாக இருந்தால், உள்ளீடுகளை மட்டுமல்ல எங்களுடை உற்பத்தி களை சந்தைப்படுத்துவதற்குக்கூட அவர்களே தீர்மானிப்பார்கள்.
அதுமா்திரமன்றி, இந்த நாட்டில் எவ்வளவு உற்பத்தி விளைய வேண்டும் என்பதையும் இதே தனியார்தான் நிர்ணயிக்கப்போ கின்றார்கள். எங்கள் உற்பத்தியின் விலையை அவர்களு நிர்ணயிக்கப்பபோகின்றா ர்கள். உற்பத்தியானது நுகர்வோர் சந்தைக்கு செல்கின்றபோது அதனையும் அவர்களு நிர்ணயிக்கப்போகின்றார்கள்.
இவ்வாறு அனைத்தையும் தனியார்களே நிர்ணயிப்பார்களாக இருந்தால், எதிர்காலத்தில் எமது காணிகளும் கொம்பணிகளிடமே சென்றடையும் சூழல் உருவாகும். அவ்வாறு உருவாகின்றபொழுது, இதே உற்பத்தியார்கள் அந்த கொம்பனிகளிடம் பணியாற்றும் நிலையும் உருவாகும்.
இது 14ம், 15ம் நூற்றாண்டுகளில் போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் கொம்பனிகள் எவ்வாறு நாட்டுக்குள் வந்து பின்னாட்களில் அந்த கொம்பனிகளின் ஆதிக்கம், 400 ஆண்டுகளிற்கு மேல் எம்மை ஆண்டு அடிமைப்படுத்தி சென்றது போன்ற ஒரு சூழலை இதே கொம்பனிகள் இதே மண்ணில் ஏற்படுத்தாது என்றும் சிந்திக்க வேண்டும்.
விவசாயம் மாத்திரமல்ல. பல்துறை சார்ந்த தனியார் மயமாக்கல் மூலம் மொத்த நாடுமே கொம்பனிகளிற்குள் அல்லது சர்வதேச கொம்பனிகளிற்குள் அடிமையாகி நாங்கள் இயல்பற்ற மக்களாக மீளவும் சுதந்திர போர் ஒன்றில் ஈடுபடுமளவிற்குகூட இந்த மக்கள் தள்ளப்படலாம்.
இந்த தனியார்மயமாக்கலை மிக மிக நிதானமாக இந்த அரசு கையாளாவிட்டால் எதிர்காலத்தில் இந்த நாட்டின் மொத்த மக்களுடைய கேள்விக்குறியாக மாறும். இந்த தனியார்மயமாக்கல் என்ற விடயத்தில் அரசும், அரசுசார்ந்த அதிகாரிகளும், துறைசார் நிபுனர்கள், அரசியல்வாதிகள் அனைவரும் ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும்.
அனுபவிக்கும்போதுதான் இதன் சாதக பாதக நிலை தொடர்பில் திடகாத்திரமாக கூற முடியும். இருந்தபோதிலு்ம நான் முன்கூட்டியே கூறியது போன்று, அதாணி கொம்பனிக்கு எதிராக இந்தியாவில் எழுந்த விவசாயிகளின் எழுச்சி இன்றும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற அவல நிலைமையையும் அந்த சட்டத்தை மாற்றியமைக்குமாறு மக்கள் முன்வைக்கின்ற கோரிக்கையையும் எதிர்காலத்தில் இங்கும் நடைபெறாதிருக்க முடியாது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.