தமிழ்த்தேசிய சக்திகளைப் பொறுத்தவரை மலையகத்தமிழர்கள், தமிழ்நாட்டுத் தமிழர் உட்பட உலகெங்கும் வாழும் தமிழ்நாட்டு வம் சாவழித்தமிழர்கள் வலுவான சேமிப்பு சக்திகளாவர். இனத்தாலும், மொழியாலும், பண்பாட்டாலும் இணைந்த தொப்புள் கொடி உறவு அது. எண்ணிக்கையில் சிறியதேசிய இனமான தமிழ் மக்களை உளவியல் ரீதியாக சிங்கள தேசத்திலும் பெரிதாகக் காட்டுவது இந்த சேமிப்புச் சக்திகள் தான். தமிழ் நாடு இதில் மிகவும் முதன்மையானதும் முக்கியமானதுமாகும்.
ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை தமிழ்நாடு பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.
ஈழத்தமிழர்களைப் பொறுத்த வரை தமிழ்நாடு பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது.
அதில் முதலாவது அதன் புவியியல் அமைவிடமாகும். இந்து சமுத்திர பிராந்தியத்தில் முக்கியமான கேந்திர இடத்தில் தமிழ்நாடு இருக்கின்றது. மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்ட நிலையும் ஒருபக்கம் நிலத் தொடர்ச்சியுடையதாக இருக்கின்றமையும் இதன் கேந்திர பலத்தை பல மடங்கு வலிமையாக்கியுள்ளது.
ஆனால் துரதிஸ்டவசமாக இந்த கேந்திர இடம் பற்றிய உரையாடல் தமிழ்நாட்டில் இன்னமும் பெரியளவிற்கு கவனத்தில் கொள்ளப்படவில்லை. ஈழத்து அரசியல்வாதிகளில் இக்கேந்திர இடத்தை முதலில் அடையாளம் கண்டவர் கஜேந்திரகுமார் தான். ஆனால் நடைமுறையில் அதனை பயன்படுத்தக்கூடிய செயல்பாடுகள் ஈழத்தமிழர் பக்கத்திலிருந்து பெரியளவிற்கு முன்னெடுக்கப்படவில்லை.
இரண்டாவது தமிழ்நாட்டின் சனத்தொகையாகும். தமிழ் நாட்டில் தற்போது உத்தியோகபூர்வமாக 7 கோடிக்கு மேல் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அயல்மாநிலங்களான கர்நாடகம், கேரளம், ஆந்திரா என்பவற்றிலும் ஒரு கோடிக்கு மேல் தமிழ் மக்கள் வசிக்கின்றனர்.
கர்நாடகத்தில் இது சற்று அதிகம் எனலாம். இதை விட மும்பாய், புதுடில்லி போன்ற இடங்களிலும் இலட்சக்கணக்கில் தமிழ் தமிழ் மக்கள் வசிக்கின்றனர். மும்பாய் தமிழ் மக்களை வைத்து கமலஹாசனின் “நாயகன்” திரைப்படமும் வெளிவந்திருந்தது. வெளிமாநிலங்களில் வாழும் தமிழ் மக்கள் தமிழ் நாட்டுடன் நெருங்கிய உறவையும் கொண்டிருக்கின்றனர்.
மொத்தமாக இந்தியாவில் வாழும் தமிழ் மக்கள் எட்டுக்கோடிக்கு மேல் எனலாம். தமிழ்நாட்டின் சனத்தொகை புதுடில்லியையும், சர்வதேச வல்லரசுகளையும் கட்டுப்படுத்துவதற்கு அதிகம் உதவக்கூடியதாக இருக்கும். வல்லரசுகளுக்கு சந்தை எப்போதும் முக்கியம். ஈழத்தமிழர்களுக்கு பின்னால் அதிக சனத்தொகை கொண்ட மக்கள் இருக்குமாக இருந்தால் வல்லரசு எதிர்ப்பு நிலை எடுப்பதற்கு தயக்கத்தைக் காட்டும்.
இது ஈழத்தமிழர்களின் பேரம் பேசும் பலத்தை வலுவாக அதிகரிக்கச் செய்யும். மூன்றாவது தமிழ்நாட்டுடன் தொடர்புடைய உலகத்தமிழர்கள் உலக நாடுகளில் பெரியளவில் வாழ்வதாகும். தென்னாபிரிக்கா, மலேசியா, மொறிசியஸ், பிஜித்தீவுகள் ,சிங்கப்பூர் போன்றவற்றில் அதிகளவில் வாழ்கின்றனர். அதுவும் மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமிழ்நாட்டு வம்சாவழித்தமிழர்கள் ஒரு அரசியல் சமூகமாகவும் இருக்கின்றனர்.
முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மொரீசியசில் இருப்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. தமிழ்மக்களின் நியாயப்பாடுகளை உலகம் முழுவதும் கொண்டு செல்வதற்கும், சிறீலங்கா அரசுக்கு வலுவான அழுத்தங்களைக் கொடுப்பதற்கும் இந்த மக்கள் மிகவும் உதவியாக இருப்பர்.
மூன்றாவது தமிழ் நாட்டில் திராவிட அரசியல் மேலாதிக்க நிலையில் இருப்பதாகும். இதனால் இந்தியமையநீரோட்ட அரசியலுக்கு வெளியில் நிற்கக் கூடிய நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. மைய நீரோட்டக்கட்சிகள் மூன்றாவது இடத்தைக்கூட பிடிக்க முடியாத நிலையில் உள்ளனர்.
திராவிடக்கட்சிகளில் ஏதாவது ஒன்றில் தொங்கிக் கொண்டிருந்தால் மட்டும் தான் மூன்றாவது நிலையை அவர்களால் தக்க வைக்க முடியும். இல்லையேல் முகவரி கூட தமிழ்நாட்டில் அவர்களுக்கு கிடைக்காது போகும். ஏனைய சிறிய கட்சிகள் அனைத்தும் திராவிட அரசியலைச் சுற்றியே நிற்கின்றன.
கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இதற்கு விதிவிலக்காக இல்லை. இவ்வாறு தமிழ் நாட்டின் மேலாதிக்க அரசியல் தனித்துவமாக இருப்பது எப்போதும் தமிழ் மக்களுக்கு சார்பான நிலையை உருவாக்கும்.
இதை விட தமிழ் நாடு அதிகாரம் குறைந்ததாயினும் அரசியல் ரீதியாக பலமாக உள்ள மாநில அரசைப் பெற்றிருத்தல் இந்திய மத்திய அரசைப் பொறுத்தவரை செல்வாக்குச் செலுத்தும் மாநிலமாக இருத்தல் என்பவையும் ஈழத்தமிழர்களுக்கு சார்பானதாகும். எல்லாவற்றையும் விட மரபு ரீதியாக வலிமையாக இருக்கும் ஈழத்தமிழர் – தமிழ்நாட்டுத்தமிழர் தொப்புள்கொடி உறவு ஈழத்தமிழர்களுக்;கு வலுவான பின்பலத்தை வழங்குகின்றது. என்னதான் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் இலங்கையின் விவகாரங்களைத் தீர்மானிப்பதில் பெரும்பங்கை இந்தியா தான் வகிக்கின்றது பலவந்தமாக அந்தப்பங்கை பெற்றுக் கொள்வதற்கும் இந்தியா தயங்கியது கிடையாது.
இந்தியா தமிழ் மக்களின் நலன்களுக்கு எதிராகச் செல்வதைத் தடுக்க வேண்டுமாயின் தமிழ்நாடு ஈழத்தமிழர்களுடன் நிற்பது அவசியமானது.
தமிழ் நாட்டுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் இடையிலான தொப்புள்கொடி உறவு வரலாற்று ரீதியாக வளர்ந்த ஒன்றாகும். ஆரம்பகாலங்களில் அரசியல் தளத்தில் வளர்ந்தது என்பதை விட பண்பாட்டுத்தளத்தில் தான் அதிகம் வளர்ந்தது எனலாம். ஆறுமுகநாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை சுவாமிவிபுலானந்தர், பேராசிரியர் சிவத்தம்பி போன்றவர்கள் பண்பாட்டுத்தளத்தில் உறவு வளர்வதில் பாரிய பங்கினை ஆற்றினர்.

சிதம்பரம் போன்ற தமிழ்நாட்டின் புகழ்பெற்ற ஆலயங்களுக்கு யாழ்ப்பாணத்தில் நிலங்களும் சொந்தமாக இருந்தன.
அரசியல் தளத்தில் உறவு குறைவாக இருந்தாலும் முற்றாக இல்லை என்று கூறிவிட முடியாது. திராவிட அரசியலின் தாக்கம் இங்கும் இருந்தது. மட்டக்களப்பு தேர்தல் தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.இராஜதுரை திராவிட அரசியலினால் கவரப்பட்டே அரசியலுக்கு வந்தார். அவரது உரைகளும் திராவிட அரசியல்வாதிகளது உரைகளின் சாயலையே கொண்டிருந்தது.

அவரைப்போல அடுக்குத்தமிழில் பேசும் அரசியல்வாதிகள் இன்னமும் தமிழ் அரசியல் உருவாகவில்லை எனலாம். மலையகத்தில் இளஞ்செழியன் என்பவர் ஈழத்துதிராவிடர்கழகம் என ஒரு அமைப்பையே உருவாக்கியிருந்தார். திராவிட அரசியல் பிராமணீய ஆதிக்கத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்டிருந்த நிலையும் ஈழத்தமிழர் அரசியல் பேரினவாத்திற்கு எதிராக கட்டமைக்கப்பட்டிருந்த நிலையும் ஒருங்கிணைந்த கொள்கை ரீதியான அரசியலைப் பின்பற்றுவதில் இடைவெளியை உருவாக்கியிருந்தது. இன்று திராவிட அரசியல் தமிழ் நாட்டு தேசியவாத அரசியலாக துளிர்விடத் தொடங்கியுள்ளது. இது எதிர்காலத்தில் மாற்றங்களைக் கொண்டு வரலாம்.
ஈழத்தமிழர் அரசியலைப் பொறுத்தவரை தமிழ் நாட்டின் முக்கியத்துவத்தை முதலில் உணர்ந்தவர் தந்தை செல்வா தான். 1972 ம் ஆண்டு பதவிக்கு வந்த சிறீமா தலைமையிலான கூட்டு முன்னணி அரசாங்கம் புதிய அரசியல் யாப்பை உருவாக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது. அந்த யாப்பு முயற்சிகள் தமிழ் மக்களை யாப்பு ரீதியாகவே அரச அதிகாரக்கட்டமைப்புக்கு வெளியே தள்ளும் இலக்கைக் கொண்டிருந்தது. இந்நிலையில் தான் தந்தை செல்வா தமிழ் நாட்டின் உதவிகளைக் கோர முன்வந்தார். 1972 ம் ஆண்டு பெப்ரவரியில் தந்தை செல்வா, அ.அமிர்தலிங்கம், மங்கையற்கரசி அமிர்தலிங்கம், சுதந்திரன் ஆசிரியர்; கோவை மகேசன் என்போரைக் கொண்ட குழு தமிழ்நாட்டிற்கு பயணம் செய்தது. இது தொடர்பாக முன்னரே பயணம் செய்த ஆ.இராசரத்தினம், உலகத்தமிழ் இளைஞர் பேரவைத்தலைவர் இரா.ஜனார்த்தனன் ஆகியோர் தமிழ்நாட்டுத்தலைவர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
தந்தை செல்வா தலைமையிலான குழுவினர் அன்றைய முதல்வர் கருணாநிதி, தி.மு.க.பொதுச்செயலாளர் இரா நெடுஞ்செழியன் , தமிழரசுக்கழகத் தலைவர் ம.பொ.சிவஞ்ஞானம், திராவிடர்க்கழகத் தலைவர் பெரியார், ஸ்தாபன காங்கிரஸ் தலைவர் காமராசர், முஸ்லீம்லீக்தலைவர் காயிதேமில்லத், தி.மு.க. பொருளாளர் எம்.ஜீ.ஆர், ஆகிய தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினர் அவர்கள் அனைவரும் முழுமையாக ஆதரவு தருவதாகக் கூறினர். பெரியார் மட்டும் “தமிழ்நாட்டில் நாங்கள் அடிமைகளாக இருக்கின்றோம் ஒரு அடிமை இன்னோர் அடிமைக்கு எவ்வாறு உதவ முடியும்” என்ற கேள்வியை எழுப்பினார். சென்னை மேஜர் காமாட்சி ஜெயராமன் தந்தை செல்வா குழுவினருக்கு பொது வரவேற்பினை அளித்தார். உலகத்தமிழ் இளைஞர் பேரவைத் தலைவர் இரா.ஜனார்த்தனன் பெரியதொரு வரவேற்புக்கூட்டத்தினை நடாத்தினார்.
அனைத்து கட்சித்தலைவர்களும் அக்கூட்டத்தில் உரையாற்றினர். தனித்து ஒரு கட்சியை மட்டுமல்லாது அனைத்து கட்சிகளின் ஆதரவையும் தந்தை செல்வா கோரி நின்றது இங்கு முக்கியமானதாகும்.
ஆயுதப்போராட்டம் தொடங்கிய காலத்திலிருந்து தமிழ்நாட்டு மக்கள் தமது கொள்ளளவுக்கு மேலான ஆதரவினை வழங்கினர் எனக் கூறலாம். இந்திய மத்திய அரசு தனது நலனில் நின்று பின்தள வசதிகளையும், ஆயுத உதவிகளையும், பயிற்சிகளையும் வழங்கியிருந்தது.

ஆனால் தமிழ் நாட்டு மக்கள் எந்தவித பிரதி பலனையும் எதிர்பார்க்காமல் உதவிகளை வழங்கினர். தமிழ்நாட்டின் சாதாரண மக்களுக்கு விடுதலை இயக்கங்களுக்கிடையேயான வேறுபாடுகள் தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை எல்லோரும் விடுதலைப்புலிகள் தான்
ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கத்திற்கு கும்பகோணத்தைச் சேர்ந்த தோழர் ஸ்ராலின் என்பவர் தனது நிலங்களை விற்று நிதி உதவியினை வழங்கியிருந்தார். அது மட்டுமல்லாது மோட்டர் குண்டுகள் தயாரிப்பதில் தானும் ஒருவனாக ஈடுபட்டார். தன்னை ஒரு போராளியாகவே மாற்றிக் கொண்டார் எனக் கூறலாம். இவர் ஒரு குறியீடு மட்டும் தான். பலர் தங்களை ஒறுத்து பங்காற்றியிருந்தனர்.
23 வரையானவர்கள் தீக்குளித்து இறந்திருந்தனர்.
விடுதலை இயக்கங்கள் தமிழ் நாட்டை கவனமாகப் பயன்படுத்தினர் எனக் கூற முடியாது. தங்களுக்கழுக்கிடையேயான சண்டைகளை அவர்கள் தமிழ் நாட்டிலும் மேடையேற்றினர். இதன் உச்ச நிலை தான் ராஜீவ்காந்தியின் மரணம். இவ்வாறான செயற்பாடுகள் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை குறைத்தது எனலாம். ஆனாலும் இன்றும் கூட ஈழப்போராட்டத்தில் மிகவும் அக்கறையுடையவர்களாகவே உள்ளனர்.

தமிழ்நாட்டு மக்களுடனான ஐக்கிய முன்னணியை பொறுத்தவரை இரண்டு விடயங்கள் முக்கியமானது. ஒன்று கோட்பாடு . இரண்டாவது அணுகுமுறை. கோட்பாட்டு ரீதியாக “உலகத்தமிழர்” என்ற அடையாளத்தைக்கட்டியெழுப்புவது அவசியமானதாகும். அதாவது ஈழத்தமிழர் பிரச்சினை என்பது ஈழத்தில் வாழும் தமிழ் மக்களினுடைய பிரச்சினையல்ல அது உலகத்தமிழர் பிரச்சினையின் ஒரு பகுதி என்ற நிலைப்பாட்டை கோட்பாட்டு ரீதியாக உருவாக்க வேண்டும்.
அப்போது தான் தமிழ்நாட்டு மக்கள் இதனை வேறுநாட்டு பிரச்சினையாகப் பார்க்காமல் தம்முடைய ஒரு பகுதிப்பிரச்சினை என்ற பார்வையை பெற்றுக் கொள்வார்கள். இதற்கு ஒரே வழி “உலகத்தமிழர்” என்ற ஒரு தேசியவாதத்தை கட்டியெழுப்புவது தான். உலகத்தமிழர்கள் உலகளவில் வலிமையாக இருக்க வேண்டும் என்றால் ஈழத்தமிழர்கள் விடுதலைபெற வேண்டும் என்ற நிலையை இதனூடாக உருவாக்க வேண்டும்.
இந்த கோட்பாட்டு நிலையை “தமிழவன்” போன்ற புலமையாளர்கள் ஏற்கனவே தமிழ்நாட்டில் எடுத்திருக்கின்றனர்.
இரண்டாவது அணுகுமுறையாகும் .இதில் மிகக் கவனம் தேவை. தமிழ் நாட்டின் கட்சி அரசியலுக்குள் ஈழத்தமிழர்கள் மாட்டுப்பட்டுவிடக் கூடாது. பொது ஆதரவையே கோரி நிற்க வேண்டும்.
இரண்டாவது அணுகுமுறையாகும் .இதில் மிகக் கவனம் தேவை. தமிழ் நாட்டின் கட்சி அரசியலுக்குள் ஈழத்தமிழர்கள் மாட்டுப்பட்டுவிடக் கூடாது. பொது ஆதரவையே கோரி நிற்க வேண்டும்.
தவிர தமிழ் நாட்டுக்கட்சிகளின் கொள்ளவுக்கு மேலாக அவர்களிடம் எதிர்பார்ப்புக்களையும் வைக்கக்கூடாது. இது விடயத்தில் கட்சிகளின் எல்லைகளையும் புரிந்து கொள்ள வேண்டும்.
இதில் இன்னோர் விடயம் பரஸ்பர அக்கறையாகும். அதாவது தமிழ் நாட்டு மக்கள் மீது ஈழத்தமிழர்கள் அக்கறையாக இருக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் மீது தமிழ் நாட்டு மக்கள் அக்கறையாக இருக்க வேண்டும். உறவு என்பது ஒரு வழிப்பாதையை மட்டும் கொண்டதல்ல.

இருவழிப்பாதையை உடையது என்பதை மறக்கக் கூடாது.
தமிழக மக்களின் பொதுப்பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கவும் , போராடவும் ஈழத்தமிழர்கள் ஒரு போதும் தயங்கக் கூடாது.
சேமிப்புச்சக்திகளை ஒருங்கிணைப்பதில் தாயக சக்திகள் வெற்றியடைந்து விட்டால் தமிழ் மக்களை எந்தச்சக்தியாலும் தோற்கடிக்க முடியாது.