பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்! அச்சம் கொள்ள தேவையில்லை என்கிறார் விஜயதாச ராஜபக்ச

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனவே உத்தேச சட்டமூலத்தினால் எவரும் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவர் மேலும் தெரவிக்கையில், இந்த வரைவில் உள்ள சில விதிகள் குறித்து உலகளாவிய மற்றும் உள்ளூர் சமூகத்தால் எழுப்பப்பட்ட எதிர்ப்புக்களை அரசாங்கம் அறிந்திருக்கிறது.

எனவே விவாதம், சமரசம் மற்றும் நெகிழ்வுத்தன்மை மூலம் அவற்றை தணிக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

மக்களின் உரிமைகள், அவர்களின் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் விதிகள் ஏதேனும் இருந்தால், அவற்றை நிவர்த்தி செய்வதில் அரசாங்கம் தயாராக உள்ளது.

அதுமட்டுமின்றி, நாடாளுமன்றத்தில் சட்டமூலத்தை சமர்ப்பித்தவுடன், எந்தவொரு குடிமகனும், அரசியல் கட்சியும் அல்லது அமைப்பும் அதனை உயர் நீதிமன்றத்தில் சவால் செய்ய சுதந்திரம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews