இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு ஏற்ப கொண்டு வர மீளாய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் குறித்த விசேட அறிக்கையாளர், கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது குறித்த விசேட அறிக்கையாளர், சிறுபான்மையினர் பிரச்சினைகள் குறித்த விசேட அறிக்கையாளர் உட்பட ஏழு ஐ.நா. விசேட அறிக்கையாளர்கள் கையெழுத்திட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை தடுத்து வைத்திருப்பது குறித்தும் கவலை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் வெறுப்பு பேச்சு, வன்முறை மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக மனித உரிமை வழக்குகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் ஒரு முயற்சியாக இந்த கைது இருக்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமை மற்றும் விசாரணை இன்றி நீண்ட நாள் தடுத்து வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது