சர்வதேச நாணய நிதியத்தின், நீடிக்கப்பட்ட நிதிவசதித் திட்டம் தொடர்பான யோசனையை நாடாளுமன்றில் அங்கீகரிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புளத்சிங்கள பகுதியில் நேற்று(25.04.2023) இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “சர்வதேச நாணய நிதியத்தின் நிதியை இலங்கைக்குப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக, எதிர்வரும் வெள்ளிக்கிழமை(26.04.2023), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வாக்குகளைப் பயன்படுத்தும்.
சர்வதேச நாணய நிதியத்திடம் நிதியைப் பெற்றுக்கொண்ட பின்னர், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட ஏனைய நிறுவனங்களும், நாடுகளும் இலங்கைக்கு நிதியுதவு வழங்கும்.
கடன் பெறாமல், இந்த நாட்டை மீட்பதாக எவரும் கூறுவார்களாயின், அது, அந்த 69 இலட்சம் பேருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதி போன்றதாகும் என தெரிவித்துள்ளார்.