காரைநகர் ஈழத்து சிதம்பர தேவஸ்தானத்துக்கு உரித்தான மாணிக்கவாசகர் மடாலயம் சம்பந்தமான பிரச்சனைகளை சமாதானமாக தீர்ப்பதற்கான ஏற்பாடாக காரைநகர் புத்திஜீவிகளால் கூட்டப்பட்ட கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
அது தொடர்பான கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
குறித்த விடயம் சம்பந்தமாக ஊர்காவற்துறை திறந்த நீதிமன்ற அமர்வில் ஒரு சிலரால் வெளியில் இருந்து சமாதானத்தை ஏற்படுத்தும் முகமாக நல்லெண்ண அடிப்படையில் இருதரப்பையும் அழைத்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு உத்தேசிக்கப்பட்டது.
இன்று சனிக்கிழமை புத்திஜீவிகள் மற்றும் நலன் விரும்பிகள் 18 பேர் ஈழத்து சிதம்பர ஆலயத்தில் ஒன்று கூட்டினோம்.
இக்கூட்டத்திற்கு இரு தரப்பினர்க்கும் அழைப்புவிடுத்த போதிலும், திரு. பேரம்பலம் – நாகரத்தினம் அவர்கள் பகுதியில் இருந்து துரதிஷ்டவசமாக சாதகமான பதில் கிடைக்க வில்லை.
இதன் காரணமாக இரு தரப்பினரையும் சமாதானப்படுத்த முடியவில்லை. எனினும் மடாலயத்தின் உறுப்பினர்களில், உபதலைவர் உட்பட நான்கு’ பேர் சமூகம் அளித்தனர்.
நாம் இத்தால் பின்வரும் தீர்மானங்களுக்காக உங்களின் கருத்து பரிமாறும் மூலமாக இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொள்ள கையொப்பமிட்டு அழைப்பு விடுக்கிறோம்.
வரலாற்று உண்மைகளை மதித்தல் மாணிக்கவாசகர் மடாலயம் ஆலயத்திற்கு வரும் அடியவர்களுக்கும் மகேஸ்வர பூசை செய்யும் இடமாக ஆலயத்தின் நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு ஓத்துழைப்பு வழங்க வேண்டும்.
மேற் கூறிய கருத்துக்களை தூரநோக்குடன் சிந்திப்பதுடன் நிபந்தனைகள் இன்றி கலந்துரையாடல் மூலமான சமரச பேச்சுக்கு ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் வருவீர்கள் என நம்புகின்றோம் .
ஆகவே எதிர்வரும் வழக்கில் உங்கள் சட்டத்தரணிகளுக்கு நீதிமன்ற அமர்வில் கால அவகாசம் பெற்று சமாதான பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறோம் என கூட்டத்துக்கு வருகை தராத தரப்பினருக்கு அழைப்பு விடுவதாக குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.