
சர்வதேச மே தினத்தை முன்னிட்டு, வடமாகாண வர்த்தக ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்றையதினம் வாகனப் பேரணி ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த வாகன பேரணி ஊர்வலம், இன்று காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இருந்து ஆரம்பமாகி ஏ-9 பிரதான வீதியூடாக சென்று , யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தை சென்றடைந்தது.





இதன்போது, கார், முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள், துவிச்சக்கரவண்டி என்பன வாகனப் பேரணியாக அணிவகுத்துச் சென்றன.
இதன்போது கருத்துரைத்த வடமாகாண வர்த்த ஊழியர் சங்கத்தின் தலைவர் லக்ஸன்,
வடமாகாண வர்த்த ஊழியர்களின் நலன் கருதி குறித்த வாகனப் பேரணியை இன்றையதினம் முன்னெடுத்ததாகவும், ஊழியர்களின் தொழில்சார்ந்த பிரச்சினைகளையும் ஆறு மாத காலத்திற்குள் தீர்த்துவைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
சகல வர்த்தக சங்கத்தோடும் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்து, அவர்களோடு இணைந்து யணிப்பதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும், வடமாகாண வர்த்த ஊழியர் சங்கத்தின் தலைவர் லக்ஸன் மேலும் தெரிவித்தார்.