நாட்டில் பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விற்பனை விலை குறைந்துள்ள போதிலும், அந்த உணவுகளின் சில்லறை விலை குறையாததால், நுகர்வோர் அதிக விலை கொடுத்து பொருட்களை வாங்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெல் விலை குறைந்தாலும், சந்தையில் ஒரு கிலோ அரிசி 180 ரூபா தொடக்கம் 220 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
அரிசி ஆலைகளில் நெல் அரிசி கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
போக்குவரத்துக் கட்டணம் மற்றும் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பால் அரிசி விலையும் உயர்ந்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை குறைந்துள்ளதுடன், ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 232 ரூபாவாகும். ஒரு கிலோ பருப்பின் மொத்த விலை 315 ரூபாவாகும்.
எனினும், சில்லறை விற்பனை சந்தையில் வெள்ளை சீனி 240 முதல் 250 ரூபா வரையிலும், சிவப்பு சீனி 370 ரூபாவிலும், கோதுமை மா 230 ரூபாவிலும், பருப்பு 330 முதல் 340 ரூபா வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.