இன நல்லிணக்க நிழ்வு ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது….!

இன நல்லிணக்க நிழ்வு ஒன்று 06.06.2023  கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு தேசிய ஒருமைப்பாடு, நல்லிண்கம் மற்றும் அரச கரும மொழிள் அமைச்சின் மொழிகள் கற்றைபீட மண்டபத்தில் இடம்பெற்றது.
அனுராதபுரத்திலிருந்து குறித்த நிலையத்திற்கு  காலை ஒரு குழுவினர் விஜயம் மேற்கொண்டனர். அனுராதபுரத்தில் தமிழ் மொழி கற்கும் மாணவர்களிற்கும், கிளிநொச்சயில் சிங்கள மொழி கற்கும் மாணவர்களிற்குமிடையில் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அரச பணியில் உள்ள குறித்த மாணவர்கள் பல்வேறு அரச திணைக்களங்களில் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய ஒன்றுகூடல் மூலம் இன நல்லிணக்கம் மற்றும் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை புரிந்துகொள்ள முடிவதா அவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த நிலையத்திற்கு வருகை தந்திருந்த பௌத்த மத தலைவர்கள் மற்றம் சிங்ள இன மக்களை தமிழ் உத்தியோகத்தர்களான மாணவர்கள் வரவேற்றனர். தமிழர் கலாச்சார முறைப்படி வரவேற்றப்பட்டதை தொடர்ந்து கும்பம் வைத்தல், கோலமிடுதல், ஆலத்தி உள்ளிட்ட தமிழர் கலாச்சார முறைகள் இதன்போது தமிழ் கற்கும் சிங்கள உத்தியோகத்தர்களிற்கு விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து மங்கள விளகேற்றப்பட்டதுடன், இரு தரப்பு கலாச்சார உணவுகளும் கைமாற்றப்பட்டமை விசேட அம்சமாம். தொடர்ந்து தமிழ் சிங்கள நிகழ்வுகள் இரு இனத்தவர்களாலும் முன்னெடுக்ப்பட்டது.
தொடர்ந்து தமிழ் கலாச்சார உணவினை சிங்ள உத்தியோகத்தர்களும், சிங்கள கலாச்சார உணவினை தமிழ் உத்தியோகத்தர்களும் பரிமாறிக்கொண்டனர்.
குறித்த செயற்திட்டத்தினால் அனைத்து இன மத மொழிகளும் சமமாக மதிக்கப்பட்டு நல்லிணக்கத்துடன் இலங்கையில் வாழும் உணர்வு ஏற்பட்டுள்ளதாக பங்குபற்றியவர்கள் தெரிவிக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews