பாபு இன்சிரியூட் கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம்

பாபு இன்சிரியூட் கராத்தே பாடசாலையின் சான்றிதழ் வழங்கும் வைபவம்  இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ் உரும்பிராய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் சிவலீமன் சிலம்பம் சம்மேளனத்தின் தலைவரும் பாபு இசின்ரியு கராத்தே பாடசாலையின் தலைவர் சென்சய் சூசைநாதர் யசோதரன் தலைமையில் இடம்பெற்றது.   பாரம்பரிய கலை வடிவங்களான கராத்தே சிலம்பு நெஞ்சாக் மற்றும் வாள் சுற்றுதல் கலைகளின் ஊடாக விருந்தினர்களை விழா மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
சர்வதேச ரீதியில் சிலம்பத்தில் குலோபல் வேள்ட் றெக்கோட் செய்த மாணவர்களின் கராத்தே நிகழ்வுகள் இடம்பெற்றதுடன் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பட்டிகளும் அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வின் பிரதம அதிதியாக யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சிறப்பு அதிதியாக தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அதிகார சபையின் பனிப்பாளர் கந்தையா கருணாகரன், வடக்குமாகான கல்வி அமைசின் பிரதம கணக்காளர் முருகேசு.சிவகுமாரி, தேசிய இளைஞர் சேவைமன்றத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் சிறிமேனன் வினோதினி, யாழ். குருமுதவ்வர் ஜெபரட்ணம் அடிகளார்,
பாபு இசின்ரியு கராத்தே சம்மேளனத்தின் முதன்மைஆசிரியர் புலேந்திரன் மாஸ்ரர், சிலம்பம் சம்மேளனத்தின் செயலாளரும் பாபு இசின்ரியு கராத்தே சம்மேளனத்தின் தலைவர் சென்சய்சூசைநாதர் யசோதரன், மாணவர் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews