யாழில் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை பகுதியில் கிணறொன்றில் இருந்து ஆண் ஒருவரது சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே பகுதியைச் சேர்ந்த தெய்வேந்திரன் தேவராஜா (வயது 45)  என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இதன்போது சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ. ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.

மேலும், உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews